முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை


முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 22 July 2021 1:33 AM IST (Updated: 22 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாடார் சிவன் கோவில் அருகே முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள், பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதற்கான முகாம் சிவன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story