சாலையில் தொழுகை நடத்தியதாக 400 பேர் மீது வழக்கு
கடையநல்லூரில் அனுமதியின்றி சாலையில் பக்ரீத் தொழுகை நடத்தியதாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடையநல்லூர்:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மற்றும் பொது வெளிகளில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் கடையநல்லூர் மெயின் பஜாரில் உள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசலில் அதிகாலையில் பக்ரீத் தொழுகைக்காக ஆண்களும், பெண்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அதிக அளவில் கூடியதால் பள்ளிவாசல் அருகே உள்ள சேர்ந்தமரம் சாலையில் 200 ஆண்கள், 200 பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழுகை நடத்தினர்.
ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் சாலையை மறித்து தொழுகை நடத்த ஏற்பாடு செய்ததாக பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் உள்பட 400 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story