கடையநல்லூர், செங்கோட்டையில் பக்ரீத் சிறப்பு தொழுகை


கடையநல்லூர், செங்கோட்டையில் பக்ரீத் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 8:27 PM GMT (Updated: 2021-07-22T01:57:41+05:30)

கடையநல்லூர், செங்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கடையநல்லூர்:
கடையநல்லூர், செங்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

கடையநல்லூர்

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் பள்ளிவாசலில் மவுலவி பஷீர் அஹ்மத் உமரி, பாத்திமா நகர் தக்வா பள்ளிவாசலில் சைபுல்லா காஜா பைஜி, மஸ்ஜித் ரஹ்மான் சீனா பள்ளிவாசலில் கபீர், மக்கா நகர் ஆயிஷா பள்ளிவாசலில் சேக் உஸ்மான் ஜலாலி, பேட்டை மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசலில் முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கமும் செய்தனர். இதில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேகுதுமான், செயலாளர் முஹம்மது காசிம் என்ற சின்ஷா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் பத்ரி, கலந்தரி இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டையில் சுலைமான்நபி ஜூம்மா பள்ளிவாசலில் இமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். 
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வைத்தியர்பிச்சை அண்ணாவி தெருவில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. மாநில செயலாளர் நெல்லை பைசல் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் நகர தலைவர் முத்தப்பா, செயலாளர் மீரான்மைதீன் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கோட்டை மேலூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல், காதர்ஒலி ஜூம்மா பள்ளிவாசல், தஞ்சாவூர் தெரு மஸ்ஜிதுன் நூர்ஜீம்மா பள்ளிவாசலிலும் பக்ரீத ்சிறப்பு தொழுகை நடந்தது.
மேலும் தென்காசி, ரஹ்மானியாபுரம், மக்காநகர், மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, வாவா நகரம், வீரணம், மாலிக்நகர், பொட்டல்புதூர் போன்ற ஊர்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story