மாவட்ட செய்திகள்

கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சாவு + "||" + The boy who played on the temple wall fell to his death

கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சாவு

கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து சாவு
கடையநல்லூர் அருகே கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே வள்ளியம்மாள்புரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி கனி. இவருடைய மகன் சூர்யா வயது (10), நேற்று முன்தினம் நண்பர்களுடன் ஊரில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் சுற்றுச் சுவரில் ஏறி விளையாண்டிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தான்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவனை உறவினர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.