அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது


அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 July 2021 8:34 PM GMT (Updated: 2021-07-22T02:04:50+05:30)

மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மதுக்கூர்;
மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். 
தப்பி ஓட்டம்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் கிழக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்   துரைசெந்தில்(வயது56). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு தொடர்பாக இவரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். 
குண்டர் சட்டம்
இந்தநிலையில் துரைசெந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து துரைசெந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் துரைசெந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story