கன்னியாகுமரியில் அலைமோதிய மக்கள் கூட்டம்


கன்னியாகுமரியில் அலைமோதிய  மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 21 July 2021 9:01 PM GMT (Updated: 2021-07-22T02:31:49+05:30)

பக்ரீத் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர்.

கன்னியாகுமரி:
பக்ரீத் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் உள் நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவார்கள். அவர்கள் படகில் சென்று கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் கடலில் குளிக்கவோ, படகில் செல்லவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள்.
குவிந்தனர்
இந்தநிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று விடுமுறை நாள் என்பதால், ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்து கன்னியாகுமரியில் குவிந்தனர்.
அவர்கள் காலை சூரியன் உதயமாவதை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் திறந்து இருந்தது. அங்கும் பலர் சென்று ராமாயண காட்சிகளை பார்த்தனர். மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் பார்த்து மகிழ்ந்தனர். மாலையில் கூட்டம் அதிகரித்தது. பெற்றோருடன் வந்த சிறுவர்-சிறுமிகள் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.

Next Story