மாவட்ட செய்திகள்

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: தனது வீட்டுக்கு தானே தீ வைத்தவர் கைது + "||" + Anger over wife's refusal to pay for drinking: Man arrested for setting fire to his own house

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: தனது வீட்டுக்கு தானே தீ வைத்தவர் கைது

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: தனது வீட்டுக்கு தானே தீ வைத்தவர் கைது
மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் தனது வீட்டுக்கு தானே தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த பெரியேரிப்பட்டி ஊராட்சி துண்டு மானியம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மது குடிக்க தனது மனைவி பழனியம்மாளிடம், குமார் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததாக தெரிகிறது. இதில் குமாரின் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.