ஓமலூரில் பால் வேனில் ரேஷன் அரிசி கடத்தல்-2 பேர் கைது
ஓமலூரில் பால் வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், காந்தி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த பால் வேனை மறித்து சோதனை நடத்தினர். அந்த வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேனில் 4½ டன் ரேஷன் அரிசி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
வேனில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் முரளி (25), அவருடைய சித்தப்பா குபேந்திரன் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் பண்ணப்பட்டி பூசாரிப்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு அரிசி வாங்கி அதை கர்நாடக மாநிலத்தில் விற்று வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி, பால் வேனை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story