திருவாரூர் நகராட்சியில், மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிப்பு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்


திருவாரூர் நகராட்சியில், மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிப்பு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 22 July 2021 12:03 PM GMT (Updated: 22 July 2021 12:03 PM GMT)

திருவாரூர் நகராட்சியில் ஒரு நாளைக்கு 12 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 15,036 குடியிருப்பு, 3,965 வணிக நிறுவனங்கள் உள்ளன. வீடுகள், கடைகளில் உருவாகும் குப்பைகளில் மக்கு குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் கொண்டு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் திருவாரூர் நெய்விளக்குதோப்பு பகுதியில் உள்ள 6 ஏக்கர் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் பிரித்தெடுக்கும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது.

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 12 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து காலணிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி பயன்பாட்டிற்காகவும், மேலும் சிறுகற்கள் கட்டிட கட்டுமான தொழில்களுக்கும், மக்கும் குப்பைகள் மூலம் உரங்களும் தயாரிக்கப்படுகிறது.

ஆய்வின் போது உதவி கலெக்டர் பாலசந்திரன், துணை கலெக்டர் (பயிற்சி) தனலெட்சுமி, நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் சண்முகம், மேலாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story