மாவட்ட செய்திகள்

தொழு நோயை குணப்படுத்தக்கூடிய பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இயற்கை நல ஆர்வலர் வேண்டுகோள் + "||" + Curable leprosy Palm trees need to be protected

தொழு நோயை குணப்படுத்தக்கூடிய பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இயற்கை நல ஆர்வலர் வேண்டுகோள்

தொழு நோயை குணப்படுத்தக்கூடிய பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இயற்கை நல ஆர்வலர் வேண்டுகோள்
தொழு நோயை குணப்படுத்தக்கூடிய பனை மரங்கள் பாது காக்கப்பட வேண்டும் இயற்கை நல ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணல்மேடு, 

மணல்மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக இருந்தாலும் இந்த பகுதி விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லாமல் மரங்கள் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம். இதில் குறிப்பாக மாமரம், சவுக்குமரம், வாழைமரம். தென்னைமரம், பனைமரம், புளியமரம், இலுப்பைமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது உள்ள கால சூழலுக்கு ஏற்ப குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய வாழை, சவுக்கு உள்ளிட்ட மரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் மானாந்திருவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்கள் அதிகமாக காணப்பட்டது. தற்போது பனை மரங்களை காண்பதே அரிதாகிவிட்டது.

மேலும் பனை மரங்களை வளர்ப்பதும் குறைந்து விட்டது. பொதுவாக பனைமரங்களை வாய்க்கால் மற்றும் வயல்வெளி வரப்புகளிலும், தோப்புகளிலும், வீட்டு தோட்டங்களில் வேலி கால்களிலும் வளர்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பனை மரங்கள் முற்றிலும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி இயற்கை நல ஆர்வலர் ஒருவர் கூறுகையில் ஒரு காலகட்டங்களில் இப்பகுதிகளில் நிறைய பனை மரங்கள் காணப்பட்டது தென்னை மரத்திற்கு இணையானது பனை மரமாகும் தென்னை மரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தற்போது பனை மரங்களுக்கு கொடுப்பது இல்லை. பனை மரத்தை கற்பக விருட்சம் என கூறுவர்.

பனை மரங்கள் அதிகபட்சமாக 50 அடி உயரம் கூட வளரக் கூடியவைகளாகும். மேலும் 100 ஆண்டு காலம் வாழும் தன்மை கொண்டவை. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கருப்பட்டி, பணம் கொட்டையில் இருந்து கிடைக்கும் பருப்பு உள்ளிட்டவைகள் மருத்துவ குணம் மிக்கவை. ஏன் பனை மரத்தின் வேர் கூட தொழு நோயையே குணப்படுத்த வல்லது எனவும் கூறப்படுகிறது.

இப்படி பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்தும். மனித உடலுக்கு நன்மை தரக்கூடியவை மேலும் பனை ஓலை, பனைமர சட்டங்கள் கூரை வேயவும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் பயன்படக்கூடியது பனை மரத்தினுடைய பயன்பாடு தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதிலிருந்து கிடைக்கும் லாபமும் அதிகம். இப்படிப்பட்ட பனைமரங்கள் அழிவை நோக்கி செல்வது வருத்தம் அளிக்கின்றதுஎனவே பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் அரிதாகி வரும் பனை மரங்களை அனைவரும் நட்டுவைத்து வளர்க்க வேண்டும் என கூறினார்.