கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2021 2:46 PM GMT (Updated: 22 July 2021 2:46 PM GMT)

கோவில்பட்டி அருகே மிகவும் பழுதடைந்து இடியும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மிகவும் பழுதடைந்து இடியும் நிலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
யூனியன் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகே இலுப்பை யூரணி பஞ்சாயத்து தாமஸ் நகரைச் சேர்ந்த கிராம மக்கள், நேற்று விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, தி.மு.க. கிளை செயலாளர் அழகுராஜ், ஊர் தலைவர் முத்துகனி ஆகியோர் தலைமையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை மாற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
 பின்னர் அவர்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி
இலுப்பையூரணி பஞ்சாயத்து தாமஸ் நகரில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து 20ஆண்டு களுக்கு மேலாகிறது. இந்த தொட்டி மிகவும் பழுதடைந்து  இடியும் நிலையில்         காணப்படுகிறது. இதனை மாற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இது தொடர்பாக பலமுறை மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
ஊரக வேலை
இதே போல், எங்கள் பஞ்சாயத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்ய தாமஸ் நகரில் மட்டும் சுமார் 600 பேர் வேலை அட்டை வைத் துள்ளனர். இவர்களை கூசாலிபட்டி பகுதிக்கு அழைத்து சென்று வேலை வாங்கு கின்றனர். எங்கள் பகுதியிலேயே நிறைய வேலகைள் உள்ளன. எனவே, வேலை உறுதி திட்ட பணியாளர் களுக்கு எங்கள் பகுதியில் உள்ள ஊருணி, கண்மாய் உள்ளிட்டவற்றில் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story