தூத்துக்குடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 2பேர் கைது


தூத்துக்குடி அருகே  மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 2பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 8:52 PM IST (Updated: 22 July 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துககுடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ஜெபமணி. மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமேரி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடிக்கு ஜவுளி கடைக்கு சென்று விட்டாராம். மீண்டும் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அங்கு பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மர்நபர்கள் திருடி சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து புதுக்கோட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தோணியார்புரத்தை சேர்ந்த அர்னால்டு (வயது 21) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் சேர்ந்து நகையை திருடி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகையையும் போலீசார் மீட்டனர்.

Next Story