மாவட்ட செய்திகள்

யஸ்வந்த்பூர் கண்ணூர் இடையே சிறப்பு ரெயில் + "||" + Special train between Yesvantpur and Kannur

யஸ்வந்த்பூர் கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்

யஸ்வந்த்பூர் கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்
யஸ்வந்த்பூர் கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்
கோவை

சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது

கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு தினசரி சிறப்பு ரெயில் (07389) சேவை நேற்று தொடங்கியது. 


இதன்படி இரவு 8 மணிக்கு யஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு கண்ணூரை ரெயில் சென்றடையும். கோவைக்கு இந்த ரெயில் அதிகாலை 3.27 மணிக்கு வருகிறது. 

மறு மார்க்கமாக கண்ணூர்- யஸ்வந்த்பூர் தினசரி சிறப்பு ரெயில் (07390) சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

இந்த ரெயில் கண்ணூரில் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடையும். கோவைக்கு இந்த ரெயில் இரவு 11.07 மணிக்கு வருகிறது.

வருகிற 25-ந் தேதி முதல் யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூரு வுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (07391) சேவை தொடங்குகிறது. 

யஸ்வந்த்பூரில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6.05 மணிக்கு மங்களூரு சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு காலை 8.12 மணிக்கு வருகிறது.

மறுமார்க்கமாக மங்களூரு- யஸ்வந்த்பூர் ரெயில் (07392) சேவை வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 

மங்களூருவில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் ஒரு மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 3.52 மணிக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.