ஓசூர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட பிரகாஷ் எம்.எல்.ஏ.


ஓசூர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட பிரகாஷ் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 22 July 2021 4:34 PM GMT (Updated: 2021-07-22T22:04:54+05:30)

சின்ன எலசகிரி, ஜூஜூவாடி ஆகிய பகுதிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

ஓசூர், 

ஓசூரில் என்.ஜி.ஜி.ஓ. காலனி, பஸ்தி பாரதியார் நகர், தோட்டகிரி, அலசநத்தம் பேடரபள்ளி, காமராஜ் நகர், சின்ன எலசகிரி, ஜூஜூவாடி ஆகிய பகுதிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அதிகாரிகளுடன் கலந்து பேசி, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதில் ஓசூர் நகர பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஏ.சத்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாநகர பொருளாளர் சென்னீரப்பா, தொழிலதிபர் ஆனந்தய்யா, முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதேபோல் ஓசூர் வெங்கடேஷ் நகர், பாகலூர் ஹட்கோ, சுண்ணாம்பு ஜீபி, கிருஷ்ணா நகர், தர்கா, அரசனட்டி ஆகிய பகுதிகளுக்கும் பிரகாஷ் எம்.எல்.ஏ. நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

Next Story