4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்


4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 July 2021 4:42 PM GMT (Updated: 2021-07-22T22:12:42+05:30)

சத்திரப்பட்டி அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காமலாபுரத்திலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுமார் ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது சத்திரப்பட்டி அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அந்த பகுதியில் சாலை சமபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

Next Story