மாவட்ட செய்திகள்

34 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் + "||" + 34 Separate police relocation

34 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்

34 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்
கடலூர் மாவட்டத்தில் 34 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளாா்.
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்களில் தனிப் பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து முன்கூட்டியே அறிந்து, போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். இவர்களில் 34 பேரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார். சில போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக தனிப் பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.