நாகையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது


நாகையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 10:42 PM IST (Updated: 22 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிப்பாளையம்:-

நாகையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

ரோந்து பணி

நாகை வெளிப்பாளையம் காமராஜர் காலனி தெருவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.  அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன்படி வெளிப்பாளையம் போலீஸ் நிலைய ஏட்டு வெங்கடேசன் (வயது27), நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். 

3 பேர் கைது

அப்போது அங்கு அமர்ந்து இருந்த 3 பேர் வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வெங்கடேசன் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24), தினேஷ் (28), வண்டிப்பேட்டையை சேர்ந்த பிரதீப் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story