விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் ஒரத்தூரில் நடந்தது


விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் ஒரத்தூரில் நடந்தது
x
தினத்தந்தி 22 July 2021 10:57 PM IST (Updated: 22 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தட்டுப்பாடு இன்றி தமிழ்நாடு அரசுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாதர் சங்க உறுப்பினர்கள் கண்மணி, சுலோச்சனா, கஸ்தூரி, கீர்த்தனா, குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story