தேன்கனிக்கோட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


தேன்கனிக்கோட்டையில், குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 July 2021 6:11 PM GMT (Updated: 2021-07-22T23:41:01+05:30)

தேன்கனிக்கோட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிகோட்டை கித்வாய் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் கடந்த 5 நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிகோட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story