உருவ பொம்மை எரிப்பு


உருவ பொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 6:15 PM GMT (Updated: 2021-07-22T23:45:21+05:30)

எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு

பரமக்குடி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடகாவில் தமிழ் பெயர்களை அளிக்க முயற்சிக்கும் வாட்டாள் நாகராஜை கண்டித்தும் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செல்வம், அமைப்புச் செயலாளர் சேது முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்றார்.  ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்தும், வாட்டாள் நாகராஜை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்பு தேசிய நெடுஞ்சாலையில்  எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரது உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்பட்டது. 
தகவல்அறிந்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

Next Story