வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிட தடை
ஆடு, கோழி பலியிட தடை
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவாணம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது எல்லைம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோயிவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆடிப்பெருவிழா நடத்தவில்லை. இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடிப் பெருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமை தாங்கினார். அணைக்கட்டு துணை தாசில்தார் பழனி முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் வடிவேல் துரை வரவேற்றார்.
கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கும் ஆடி பெருவிழா முதல் வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். ஒவ்வொரு முறையும் இருபது பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிடவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முடிவில் கோவில் தலைமை எழுத்தர் பாபு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story