மாவட்ட செய்திகள்

மொபட் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி + "||" + Kills

மொபட் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

மொபட் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி
க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
க.பரமத்தி
எலக்ட்ரீசியன் பலி
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி, அண்ணாநகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 61). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் மாலை கரூருக்கு தனது மொபட்டில் வந்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 
தண்ணீர்பந்தல் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி ஆசீர்வாதம் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆசீர்வாதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
டிரைவர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆசீர்வாதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்தவிபத்து குறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், வேலூர் அருகே உள்ள சாணார் பாளையத்தை சேர்ந்த லிங்கப்பன் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஸ் மோதி பெண் பலி
பஸ் மோதி பெண் பலி
2. விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
3. விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் வாலிபர் பலி
4. மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலி
மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலியானார்
5. சாலை விபத்தில் தனியார் பள்ளி முதல்வர் பலி
வேலாயுதம்பாளையம் அருகே சாலை விபத்தில் தனியார் பள்ளி முதல்வர் பரிதாபமாக இறந்தார்.