தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளர் மீது வழக்கு


தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி:  உரிமையாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 July 2021 7:14 PM GMT (Updated: 2021-07-23T00:44:36+05:30)

தடை செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்,ஜூலை.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வி.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மலைப்பாண்டி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தடை செய்யப்பட்ட ஒரு பட்டாசு ஆலையில் 8 ஆண்களும், 8 பெண்களும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கண்ட அவர் இது பற்றி ஆமத்தூர் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் அருண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story