வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 22 July 2021 8:17 PM GMT (Updated: 2021-07-23T01:47:23+05:30)

தாழையூத்து பகுதியில் வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை:
தாழையூத்து பகுதியில் நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வீட்டில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசி 1000 கிலோவை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த தாழையூத்து சுபாஷ்நகரை சேர்ந்த செல்லத்துரை மனைவி வள்ளி என்ற சரோஜா (வயது 56) என்பவரை கைது செய்தனர். சரோஜா இந்த அரிசியை வைத்து முறுக்கு, இடியாப்பம் செய்து விற்பனை செய்ய பயன்படுத்தியது தெரியவந்தது.
இதேபோல் பாளையங்கோட்டையில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்த முருகன் என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Next Story