கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 23 July 2021 2:03 AM IST (Updated: 23 July 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் ஊராட்சி நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து அண்ணாநகரில் கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று நடத்தியது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மதி தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவர் நல்லபெருமாள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ராசு செய்திருந்தார். இதேபோல கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் டாக்டர் பர்வீன்பானு தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.


Next Story