நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது


நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது
x
தினத்தந்தி 22 July 2021 9:02 PM GMT (Updated: 2021-07-23T02:32:16+05:30)

கோலாரில், நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த பெண் பலரிடம் ஹனி டிராப் முறையில் மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.

கோலார்: கோலாரில், நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த பெண் பலரிடம் ஹனி டிராப் முறையில் மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது. 

ஹனிடிராப்

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் டவுன் வெங்கடேஷ்புரா லே-அவுட்டை சேர்ந்தவர் பார்வதி. இவர் பலரிடம் ‘‘ஹனிடிராப்’’ முறையில் பணத்தை பறித்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே, ஹனிடிராப் முறையில் பண மோசடி செய்ததாக மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஹனிடிராப் முறையில் பணம் பறிக்கும் குற்றச்சாட்டின் பேரில் பார்வதியை அழைத்து கோலார் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்த முயன்றார்.

 இதை எதிர்த்து பார்வதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் அளிக்க முடிவு செய்தார். இதற்காக பங்காருபேட்டை தாலுகா, காரஹள்ளியை சேர்ந்த வக்கீல் பிரசன்னா என்பவரின் உதவியை நாடினார். அவர் மூலம் கோலார் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை மிரட்டுவதாக டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்  அளித்தார். 

நெருக்கம் அதிகரித்தது

இதன்பின்னர், பார்வதிக்கும் வக்கீல் நவீனுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இருவரும் நெருங்கி பழகினர். இந்த நிலையில் வக்கீல் நவீனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்வதி பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களுக்கு அனுப்பினார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டார். அந்த புகைப்படங்களுடன் தனக்கும், நவீனுக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறி ஒரு பதவியையும் வெளியிட்டு இருந்தார்.  தற்போது நவீன் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய பார்வதி, தனக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும் வக்கீல் நவீனை மிரட்டி உள்ளார். 

கைது

இதனால், நவீன் அதிர்ச்சிக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பார்வதிக்கு ரூ.1 லட்சத்தை நவீன் கொடுத்துள்ளார். அதன்பின்னர் பார்வதி மீண்டும், மீண்டும் பணம் கேட்டு நவீனுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளானா வக்கீல் நவீன் நேற்று கோலாரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் பார்வதி மீது புகார் அளித்தார். 

அதன்பேரில். வழக்கு பதிவு செய்து போலீசார் பார்வதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பார்வதியால் ஹனிடிராப் முறையில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். 

Next Story