மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காங்குழி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 68). விவசாயியான இவர் சொந்த வேலையாக ஆண்டிமடம் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு ஜெயங்கொண்டம்- ஆண்டிமடம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், எதிர்பாராதவிதமாக வீரபாண்டியன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரபாண்டியன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் வீரபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரபாண்டியனின் மனைவி கண்ணம்மாள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 47) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story