8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் முருகன் (வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய தாயிடம் கூறி அழுது புலம்பினார். சிறுமியின் தாயார் இது குறித்து முருகனிடம் கேட்டபோது அவர் சிறுமியின் தாயாரை தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து நேற்று திருவள்ளூரை அடுத்த பட்டாபிராமில் பதுங்கியிருந்த முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story