கணவன், மனைவி கொலை வழக்கில் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வண்டலூர் அருகே கணவன், மனைவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (வயது 65). இவரது 2-வது மனைவி ஜெனட் (52). இவர்கள் இருவரையும் கடந்த 17-ந்தேதி மர்ம நபர்கள் கொலை செய்து அவரது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் உடலை வீசிவிட்டு சென்றனர்.
இது குறித்து ஒட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு விசாரித்து வந்தார். 6 நாட்கள் ஆன பின்னரும் கொலையாளிகள் கைது செய்யப்பட வில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனி கவனம் செலுத்தி 5 தனிப்படை அமைத்துள்ளார். இந்த கொலை நகைக்காக நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-
கொளப்பாக்கத்தில் கணவன், மனைவி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை மிக விரைவில் பிடித்து விடுவோம், தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story