ரவுடியை வெட்ட முயன்ற 5 பேர் கைது


ரவுடியை வெட்ட முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 4:19 AM GMT (Updated: 2021-07-23T09:49:41+05:30)

ரவுடியை வெட்ட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லூர், 

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாம் (வயது 20). ரவுடியான இவர் மீது 3 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரும் இவரது நண்பர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் நூக்கம்பாளையத்தில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். 

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு அருகே வந்தபோது சாலையின் இருபுறமும் தயாராக நின்று கொண்டிருந்த 5 பேர் அவர்களை அரிவாளால் வெட்ட முயன்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் அவர்களிடமிருந்து தப்பித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார், துரைப்பாக்கம் காவல் உதவி கமிஷனர் ரவி தலைமையில் உதவி ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ் (வயது 23) சதீஷ்குமார் (26) பாபு கான் (25) அவருடைய நண்பர்கள் தேனாம்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் ( 29) திருவண்ணாமலை மாவட்டத்தை் சேர்ந்த விக்கி (25) ஆகியோர் வெட்ட முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து 3 பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் 5 பேர் மீதும் கொலைமுயற்சி, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story