வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது


வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 10:56 AM IST (Updated: 23 July 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை கோயம்பேடு அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 73). இவர், அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பாலசுந்தரத்தை பிடித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் பாலசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story