அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ராமநாதபுரம்
மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்பிகை அருள்தரும் வெள்ளியாக கருதப்படுகிறது. இதன்படி நேற்று முதல் ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கோவில்களில் திருவிளக்கு பூஜை, ஆடிவெள்ளி ஊஞ்சல் உற்சவ பூஜை, குங்கும அர்ச்சனை நடத்தப்பட்டு மகாதீப ஆராதானை நடத்தப்பட்டன. இதுதவிர அம்மன் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதுதவிர அனைத்து வீடுகளிலும் பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டனர். இதனையொட்டி வீடுகளில் உள்ள அம்மன் படங்களை மலர்களால் அலங்கரித்து சிறப்பு படையலிட்டு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ேமலும் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
Related Tags :
Next Story