காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு


காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 4:00 PM GMT (Updated: 2021-07-23T21:30:39+05:30)

காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு

கோவை

காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து உள்ளததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

காற்றாலை மின் உற்பத்தி

தமிழகத்தில் கோவை உள்பட பல மாவட்டங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

பொதுவாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் காற்றாலை மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும். 

இது குறித்து காற்றாலை மின்உற்பத்தி நிர்வாகிகள் கூறியதாவது: -
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக் கும் அளவிற்கு காற்றாலை கட்டமைப்புகள் உள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் மே கடைசியில் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசனாக உள்ளது. இந்த காலகட்டத்தில் மின் உற்பத்தி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

காற்றின் வேகம்

தற்போது ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து காற்றாலை மின் உற்பத்தி யும் அதிகரித்து உள்ளது. 

இதில் கடந்த 21 -ந் தேதி ஒரே நாளில் மட்டும் 101 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் தமிழகத்திற்கு மொத்தம் 309 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டது. 

இதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் காற்றாலை மூலம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் நாட்களில் கோவை உள்பட தமிழகத்தில் உள்ள காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காற்றின் வேகம் அதிகரித் தால் காற்றாலை மின்உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story