3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 July 2021 9:32 PM IST (Updated: 23 July 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம்
சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் (வயது 34). இவர் மதுபோதையில் சாயல்குடி மாதவன்நகர் வீரன் (60) என்ற பூசாரியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் கட்டையால் தாக்கி படுகாயப்படுத்தினார். இதுதொடர்பாக சாயல்குடி போலீசார் வழக்குபதிவு செய்து சுரேஷ்கண்ணனை கைது செய்தனர். சாயல்குடி பகுதியை சேர்ந்த கோட்டைசவரிமுத்து(35) என்பவர் தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டை சவரிமுத்துவை கைது செய்தனர்.
ஏர்வாடி தொத்தமாவடி பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(52). இவர் கள் இறக்கி விற்பனை செய்து வந்த நிலையில் ஏர்வாடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் சந்திரகலா, இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story