டெங்கு ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்


டெங்கு, ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
டெங்கு, ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

டெங்கு ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீசு ஒட்டப்படுகிறது. மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி மருந்து ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி கூறியதாவது:-

பொள்ளாச்சி பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பொதுமக்கள் தொட்டிகளில் மழைநீரை தேக்கி வைப்பதால் டெங்கு காய்ச்ல் மற்றும் ஜிகா வைரஸ் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆக வாய்ப்பு உள்ளது. இந்த கொசுக்கள் பகலில் மனிதர்களை மட்டும் கடிக்கும்.

இந்த வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டும் முட்டையிட்டு, அவை ஒரு வார காலத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் பரப்பும் கொசுக்களாக மாறி விடுகின்றன. 

டெங்கு, ஜிகா வைரஸ் தடுப்பு பணிக்கு நகராட்சி மூலம் 86 தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் ஏ.டி.எஸ். கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பணியாளர்கள் சுழற்சி முறையில் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

 பொதுமக்கள் டெங்கு, ஜிகா வைரஸ் தடுப்பு பணிக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி, தோலின் மேற்பகுதியில் வியர்குரு போன்ற தடிப்புகள், உடல்வலி மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படும்.

ரத்தத்தில் தட்டு அணுக்களின் எண்ணிக்கையை விரைவாக குறைத்து உள் உறுப்புகளில் ரத்த கசிவு ஏற்படும். மேற்கண்ட பாதிப்புகளுடன் சிவந்த கண்கள், தலைவலி, தசைவலி ஆகியவை ஜிகா வைரசின் அறிகுறிகளாகும்.

 எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி, வடுகபாளையம் மற்றும் காமாட்சி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story