சிகிச்சை பலனின்றி பெயிண்டர் சாவு


சிகிச்சை பலனின்றி பெயிண்டர் சாவு
x
சிகிச்சை பலனின்றி பெயிண்டர் சாவு
தினத்தந்தி 23 July 2021 9:48 PM IST (Updated: 23 July 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

சிகிச்சை பலனின்றி பெயிண்டர் சாவு

நெகமம்

கும்பகோணத்தை சேர்ந்தவர் வாசு (வயது 48).இவர் நெகமம் அருகே உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் தங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வாசு சென்று கொண்டிருந்தார்.  வடசித்தூர் வெள்ளி விநாயகர் கோவில் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த வாசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டுகோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story