சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
நிம்மேலி ஊராட்சியில் சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நிம்மேலி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகில் ரேஷன் கடை கட்டிடம் உள்ளது.
இந்த ரேஷன் கடையில் நிம்மேலி, அரூர், தத்தங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி, சீனி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி வந்தனர்.
இந்தநிலையில் ரேஷன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுவதால், மழை காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து உணவு பொருட்கள் வீணாகி வந்தன.
இதனை தொடர்ந்து தற்போது கடந்த சில மாதங்களாக ரேஷன் கடை அடிப்படை வசதியில்லாத வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
எனவே சேதமடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய ரேஷன் கடை கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என நிம்மேலி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story