திருமயம் கோர்ட்டில் எச்.ராஜா ஆஜர்


திருமயம் கோர்ட்டில் எச்.ராஜா ஆஜர்
x
தினத்தந்தி 23 July 2021 10:42 PM IST (Updated: 23 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருமயம் கோர்ட்டில் எச்.ராஜா ஆஜர்

திருமயம், ஜூலை.24-
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யநாதபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த ஊர்வலத்தில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அங்கு மேடை அமைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அவர் போலீசாருடன் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக பேசி தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக எச்.ராஜா உள்பட 20 பேர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக திருமயம் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்ததோடு திருமயம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி நேற்று அவர் திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் ஆஜரானார். ேமலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரும் ஆஜராகினர். இந்த வழக்கை  நீதிபதி வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் கோர்ட்டை விட்டு வெளியே வந்த எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், இந்துக்களுக்கு ஆதரவாக பேசும் என்னை போன்றவர்கள் மீது வழக்குகள் போடப்படுகிறது. இந்த வழக்குகளை எதிர்கொள்வேன். நாட்டையும், பிரதமரையும் உள்துறை மந்திரியையும், இந்து சமுதாயத்தினரையும் இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை. அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை என்றால் இந்து சமுதாயம் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும். விவசாயிகளை திருடர்கள் என்று பேசிய தமிழக நிதி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Tags :
Next Story