குடும்ப பிரச்சினையால் விரக்தி: புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
திருவையாறை, குடும்ப பிரச்சினையால் விரக்தி: புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவையாறு.
திருவையாறை அடுத்த மேலஉத்தமநல்லூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது32). இவருக்கும், பிரியதர்ஷினி(20) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன் நேற்று வீட்டில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரியதர்ஷினி கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story