நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 23 July 2021 11:45 PM IST (Updated: 23 July 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று 5 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 2 மி.மீட்டரும், 27-ந் தேதி 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 2 நாட்களுக்கு மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாளும், 27-ந் தேதியும் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்திலும் தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.
மிதமான மழை
சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் பரவலாக லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் முட்டை அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு, தீவனம் மற்றும் குடிநீரில் உரிய கிருமி நாசினியை உபயோகிக்கவேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.

Next Story