காட்டு பகுதியில் ஆண் பிணம்


காட்டு பகுதியில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 23 July 2021 7:15 PM GMT (Updated: 2021-07-24T00:45:08+05:30)

நெல்லை அருகே காட்டு பகுதியில் ஆண் பிணம் கிடந்தது.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள பாப்பான்குளம் காட்டுப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். அப்போது பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story