கொடைரோடு அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி


கொடைரோடு அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 24 July 2021 1:38 AM IST (Updated: 24 July 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார்.

கொடைரோடு:
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணனூரை அடுத்த விராலிகாட்டுவிளையை சேர்ந்தவர் விஜில் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரெயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரெயிலில் இருந்து கீழே இறங்கிய விஜில், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே அவர் வந்த ரெயில் புறப்பட்டது. இதை கவனிக்காமல் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த விஜில், சுதாரித்து கொண்டு அந்த ரெயிலில் ஏற முயன்றார். 
ஆனால் அவரால் அதில் ஏற முடியவில்லை. இதனால் அவர் விரக்தியில் கொடைரோடு ரெயில் நிலைய தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். கொடைரோட்டை அடுத்த கொழிஞ்சிபட்டி என்ற பகுதியில் அவர் வந்தபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு ரெயில் விஜில் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story