அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 July 2021 2:18 AM IST (Updated: 24 July 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்;
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். ஆடி முதலாவது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ர காளியம்மன்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தங்களது எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
தஞ்சை வடக்குவாசலில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள கோடியம்மன்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சக்தி முனியாண்டவர் கோவில்
தஞ்சை பில்லுக்காரத்தெரு ஜி.ஏ.கெனால் சாலையில் புதுஆற்றங்கரையோரத்தில் சக்தி முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாகநாத விநாயகர், முருகன், நாகநாதசாமி, நாகேஸ்வரிஅம்மன், விஷ்ணுதுர்க்கை, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், சனீஸ்வரன், ஜெயவீரமகா ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளின் சன்னதிகளும் உள்ளன. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சக்தி முனியாண்டவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை அடுத்த வல்லம் ஏகவுரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சை மானம்புச்சாவடி மும்மூர்த்தி விநாயகர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் தஞ்சை உள்ள கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story