333 கிலோ கஞ்சா பறிமுதல்
குமரி மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
கஞ்சா பறிமுதல்
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் மட்டும் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் விளைவாக கடந்த 53 நாட்களில் மட்டும் 89 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதே போல குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில் 750 கனரக வாகனங்கள் மீதும், இந்த மாதத்தில் 23 நாட்களில் 1,250 கனரக வாகனங்கள் மீதும் என மொத்தம் 2 ஆயிரம் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிக பாரம் ஏற்றி அனுப்பும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹெல்மெட் அணியாமல்...
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களையும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களையும் போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தியதில் ஹெல்மெட் அணியாமல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 92 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல அதிக பாரம் ஏற்றி வந்த 98 கனரக வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story