விண்ணில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகிறது?; விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்கள்


விண்ணில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகிறது?; விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 23 July 2021 9:24 PM GMT (Updated: 23 July 2021 9:24 PM GMT)

விண்ணில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பெங்களூரு: விண்ணில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 

நட்சத்திரங்கள் எப்படி உருவாகிறது?

விண்ணில் விண்மீன் கூட்டங்களில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகிறது மற்றும் அது எப்படி மறைந்துபோகிறது என்பது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது. அந்த குழுவில் பெங்களூரு அறிவியல் கழகம், இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர். சக்தி வாய்ந்த 2 ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் உள்ள ரேடியோ வானியல் ஆய்வு கூடங்களில் இருந்து இந்த ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆராய்ச்சி குறித்து இந்திய அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெரிய நட்சத்திரங்கள் வெடிக்கும்...

விண்மீன் கூட்டங்களில் பெரிய நட்சத்திரங்கள் ஆயுள்காலத்தின் முடிவில் வெடிக்கிறது. அவ்வாறு வெடிக்கும்போது அதில் இருந்து துகள்கள் ஏற்படுகின்றன. அது சிறிய நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன. இவ்வாறு 80 வகையான நட்சத்திர துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 
இது, நட்சத்திர துகள்கள் குறித்த நீண்ட கால மர்மங்களுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றும். நட்சத்திரங்கள் புதிதாக உருவாவதற்கான பிற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, மெத்தால் மூலக்கூறுகளில் இருந்து வெளியாகும் ரேடியோ உமிழ்வு.

ரேடியோ தொலைநோக்கி

பெரிய நட்சத்திரங்கள் உருவாகும்போது அதன் தொடக்கத்தில் இந்த உமிழ்வு வெளியாகிறது. இளம் நட்சத்திரங்களை தூசுகள், கியாசில் இருந்து வெளியாகும் மேகங்களால் சூழப்படுகிறது. நட்சத்திரங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு இந்த ரேடியோ தொலைநோக்கிகள் மிகவும் உதவியாக உள்ளன. 

இதிலும் ஜெர்மனியில் உள்ள ரேடியோ தொலைநோக்கி இன்னும் அதிகமான தகவல்களை சேகரித்து வழங்குகிறது. இந்த தொலைநோக்கி அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிய பிறகும், சிறப்பான முறையில் செயல்படுகிறது. முந்தைய ஆய்வைவிட இப்போது மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு இந்திய அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

Next Story