கோவை புறநகர் பகுதிகளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது
கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கோவை
கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதுடன், இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: -
அதிரடி சோதனை
கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் கருமத்தம்பட்டி பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 390 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஹீராராம் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற சோதனையில் 132 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சாதிக் (52), குணசேகரன் (49) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடும் நடவடிக்கை
கோவில்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நரேன்லால் (25), அஜ்பரன் (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 330 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் புறநகர் பகுதியில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் இதுகுறித்து 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story