திருவள்ளூரில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2021 4:56 AM IST (Updated: 24 July 2021 4:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிளை தலைவர் தணிகாசலம் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திரளான எல்.ஐ.சி. முகவர்கள் கலந்துகொண்டு எல்.ஐ.சி.யின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடும் முடிவை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், கொரோனா தொற்றினால் உயிரிழந்த முகவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story