பள்ளிப்பட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பள்ளிப்பட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள கோணசமுத்திரம், அண்ணாநகர், டி.வி. கண்டிகை, பெருமாநல்லூர் காலனி, நல்ல வானம் பேட்டை, உள்ளிட்ட 11 தொடக்கப் பள்ளிகளில் தமிழ் தலைமை ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
அதே போல் அத்திமாஞ்சேரி, சாமி நாயுடு கண்டிகை, கொத்த கண்டிகை உள்ளிட்ட 7 தொடக்கப் பள்ளிகளில் தெலுங்கு தலைமையாசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
இவற்றை நிரப்ப வேண்டும் என்றும், தமிழ் வழி இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற வழி வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிப்பட்டு வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில், வட்டார தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளர் மோசஸ் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது,கடந்த 9 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடைநிலை தலைமை ஆசிரியர்களை பதவி உயர்வு செய்ய கோரியும், பள்ளிப்பட்டு வட்டார கல்வி அலுவலரின் முறைகேடான பரிந்துரைகளை கண்டித்தும் ஆசிரியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் திரளான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story