சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி மிரட்டிய வாலிபர் கைது


சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 10:52 AM IST (Updated: 24 July 2021 10:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நொளம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை நொளம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முகப்பேர் 6-வது மெயின் ரோட்டில் கூட்டமாக நின்றிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அதில், அங்கு இருந்த வாலிபர் ஒருவர், சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி மிரட்டியதுடன், அவர் மீது கல்லை தூக்கி வீசிவிட்டு மற்றொருவருடன் மோட்டார்சைக்கிளில் ஏறி சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசி மிரட்டிய அம்பத்தூர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த செனிஷ் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story