மாவட்ட செய்திகள்

கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Christian Peoples Front Demonstration

கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் சீலன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மரியஆரோக்கியம், மாவட்ட அமைப்பாளர் லியோ, இளைஞர் அணி அமைப்பாளர் டான் கிளிண்டன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெல்லியில் கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய ஆலயம் கட்ட வேண்டும். ஸ்டேன்சாமி மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.